தமிழன்டா என உசுப்பேற்றியது என்னாச்சு? – மன்னிப்பு கோரிய அர்ச்சுனா!

10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக மன்னிப்புக் கோருவதாக யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். சிங்கள யூடியூப் நிகழ்ச்சியொன்றில் இன்று (23) கலந்து கொண்ட போது அர்ச்சுனா இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்குறித்தனமாக நடந்து கொள்ளும் அர்ச்சுனா, எதிர்க்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து குழப்பம் விளைவித்த சமயத்தில், அர்ச்சுனா பேஸ்புக் நேரலையில் அதனை வெளியிட்டு, தமிழன்டா என குறிப்பிட்டிருந்தார்.

யாழ் ஊசி கட்சி MP நாடாளுமன்றில் இருந்து விலக்கப்படுவார்

யாழ் ஊசி கட்சி MP விரைவில் நாடாளுமன்றில் இருந்து விலக்கப்படுவார். நாடாளுமன்ற சேவியர்களுடன் முதல் நாளே தான் MP என்று மோதியாச்சு! அடுத்த கட்டம் நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்ற தெரியாத காரணம் மற்றும் சட்ட திட்டங்களை சரியாக விளங்கி புரிந்து நடக்கத் தெரியாது என்று தடை உத்தரவு வரும் . அப்போது அவரின் தங்கம் கௌசல்யா MP யாக போகும் வாய்ப்பு விரைவில் வரும் என்பதை ஒரு எதிர்வு கூறலாக தருகிறேன். என்னவொரு கோமாளியை வடக்கு மக்கள் […]

அர்ச்சுனா பிணையில் விடுதலை!

மன்னார் நீதிமன்றுக்கு கைவிலங்குடன் அழைத்துவரப்பட்ட மருத்துவர் அருச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வைத்தியர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை,பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை, அரச சேவைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றசாட்டுக்களின் அடிப்படையில் வைத்தியர் அருச்சுனா கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று மன்னார் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சற்று முன் அவர் பேஸ்புக்கில் நன்றி தெரிவித்து […]

அர்ச்சுனாவுக்கு பிணை நிராகரிப்பு!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் மகபேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் திங்கட்கிழமை (05) உத்தரவிட்டுள்ளார். வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு, நகர்த்தல் பத்திரம் ஊடாக திங்கட்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல நீடித்து, மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதே நேரம் அனுமதி […]