இனி 24 மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு. – யாழ்ப்பாணத்தில் புதிய கடவுச்சீட்டு காரியாலயம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், ஒரே நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு விண்ணப்பிக்கின்றவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்காக, பதிவு செய்யும் நடவடிக்கை ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6.00 மணி முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கை விரைவாக கடவுச்சீட்டு பெற விரும்புவோருக்காக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் கடந்த 19ம் திகதி மீண்டும் […]

விசா பெறுவதில் இலங்கை 33வது இடத்தில்!

கொழும்பின் திறன் மற்றும் வளர்ச்சிபிராண்டு ஃபைனான்ஸ் (Brand Finance) அறிக்கையின் படி, இலங்கை, தெற்காசியாவின் சிறந்த இடமாக கொழும்பின் நற்பெயரையும், நாட்டின் போட்டித்திறனையும் மேம்படுத்தும் வகையில், விசாக்களை எளிதாகப் பெறுவதில் 33வது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “35 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு அறிமுகம், நகரத்தின் கவர்ச்சியை கணிசமாக உயர்த்தியிருக்கலாம், இது பார்க்க எளிதான தெற்காசிய நகரங்களில் ஒன்றாகும்,” என்று பிராண்டு ஃபைனான்ஸ் சமீபத்திய செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. சரிவை எதிர்கொண்டும் முன்னேற்றம்எனினும், கொழும்பு சமீபத்தில் […]

இலங்கை ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள டோக்கன் எடுப்பது எப்படி?

இன்று முதல் வன்டே சேர்விஸ்/ நோர்மல் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் ஒன்லைன் மூலம் டோக்கன் எடுப்பதற்கு அப்ளை பண்ண முடியும். 2024.11.06 ஆம் திகதி முதல் கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளின் வசதி கருதி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு புதிய முறையொன்று நடைமுறைப்படுத்தப்படும்.

உலகின் சிறந்த கடவுச்சீட்டை கொண்ட நாடாக சிங்கப்பூர் – இலங்கை 105 இருந்து 95 வது இடத்தில்!

அக்டோபர் 2024 இல் வெளியிடப்பட்ட சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, சிங்கப்பூர் மீண்டும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக பெயரிடப்பட்டுள்ளது, அதன் குடிமக்களுக்கு 195 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகியவை இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டன, சமீபத்திய தரவரிசையின்படி 192 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகின்றன. அமெரிக்கா 8வது இடத்தைப் பிடித்தது, அதன் குடிமக்களுக்கு 186 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவு வழங்குகிறது. இதற்கிடையில், […]

கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான இணையவழி முறைமை.

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யக்கூடிய இணையவழி முறைமையொன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்காக பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அருகே மக்கள் தொடர்ந்தும் நீண்ட வரிசையில் காத்திருப்பதனை அவதானிக்க முடிந்துள்ளது. நேற்றைய தினம் விடுமுறை நாளாக இருந்த போதிலும் மக்களின் வரிசை காணப்பட்டுள்ளது.. இன்றைய தினம் வெவ்வேறு பகுதிகளிலிருந்து பத்தரமுல்லை […]

ஒரு மணி நேரத்தில் கடவுச்சீட்டு…

இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் நெருக்கடி நிலைமை நீடித்து வரும் நிலையில், ஒரு மணி நேரத்தில் அதனை பெற்றுக்கொண்ட அரச அதிகாரியினால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் வியானி குணதிலக்க நேற்று காலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வந்து ஒரு மணித்தியாலத்தில் தனது புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டார். அவர் காலை 10.15 மணிக்கு வந்ததாகவும், 11.30 மணியளவில் அவர் தனது இராஜதந்திர சிறப்புரிமையை ரத்து செய்துவிட்டு சாதாரண கடவுச்சீட்டை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டுக்கு முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மாத்திரமே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின், தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாமல் செல்வதைத் தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பாதுகாப்பான புதிய இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு, நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.