அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள்.

மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். NPP தேசிய மக்கள் சக்தி சார்பில்அப்புத்தளை தொகுதியில் பதுளை மாவட்டத்திற்கான வேட்பாளர் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். Ambika Samuelநுவரெலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். Selvi Selvi கடந்த 1977ஆம் ஆண்டில் முதலாவது மலையக பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மலையக சமூகம் கடந்த […]

நல்ல கருத்து! மட்டக்களப்பாரைப் பார்த்து திருந்துங்கள்…..

மட்டக்களப்பாரைப் பார்த்து திருந்துங்கள் என யாழ்பாணத்தாரை இகழும் பதிவுகள் பல சமூக வலைத்தளங்களில் தென்படுகின்றன. தமிழருக்கு எப்படி யாழோ அதே போல சிங்களவர் பரவபலாக வாழும் மாத்தறையில் ஒரு தமிழ்ப் #பெண் அதிகப்படியான அதாவது 148,379 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். யாழில் NPP எந்தவொரு சிங்கள வேட்பாளர்களையும் நிறுத்தவில்லை. அதே சமயம் ஒரு தமிழ்ப் பெண் வேட்பாளரை மாத்தறையில் தவிர்க்கவும் இல்லை.களங்கள் மாறும் பொழுது அதற்கேற்ப கொள்கைகளும் மாறவேண்டும். அதுவே சிறந்த தலைமைத்துவத்திற்கு அழகு. […]

அநுரவின் வெற்றியை கொண்டாடும் யாழ்ப்பாணம்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆதரவாளர்கள் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இன்று காலை பொங்கல் பொங்கி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை ஆதரவாளர்கள் கொண்டாடியுள்ளனர். இதன்போது பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.