மன்னாரில் இளம் தாயின் மரணம் தொடர்பில் வைத்தியசாலையின் தகவல்.!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்த இளம் குடும்பப் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம் பெற்று வருவதோடு, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முடிவடைந்த நிலையில் உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி பட்டதாரி இளம் குடும்ப […]
அடாத்தாக பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வு.
தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவயன் குடியிருப்பில் அடாத்தாக பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வு இடம் பெற இருந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய அப்பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவயன் குடியிருப்பு பகுதியில் சுமார் 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட காணி சட்ட விரோதமாக பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு, கனிய மணல் அகழ்வு இடம்பெற […]
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவரின் சொத்து முடக்கம்!
மன்னாரில் போதை பொருள் விற்பனையுடன் தொடர்பு பட்ட சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்து முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். தலைமன்னார் பகுதியை சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு வீடுகள்,சொகுசு வாகனம் உள்ளடங்கலாக 9 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மேற்படி நீதிமன்ற அனுமதியுடன் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் 2002 ஆம் ஆண்டு அரச வீட்டுத்திட்டம் ஒன்றை பெற்று இரண்டு […]