யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய், அதே விறுவிறுப்புடன் கட்சியின் முதல் செயற்குழு கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளார். திரையுலகை தாண்டி, அரசியலுக்கு வந்துள்ள விஜய் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் தனதாக்கிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், யாரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்யக்கூடாது என்று தொண்டர்களுக்கு கண்டிப்புடன் விஜய் வலியுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் நடந்த செயற்குழு கூட்டத்திலும் விஜய் இதை கண்டிப்புடன் வலியுறுத்தி இருக்கிறார். அரசியல் கட்சி தலைவர்களை மட்டுமல்ல, திரையுலகில் முன்னணியில் […]