தமிழர்கள் சண்டையிலா?:மறுக்கின்றது ரஸ்யா!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரெய்னிற்கு எதிராக போரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல்களை இலங்கைக்கான ரசிய தூதரகம் மறுத்துள்ளது. பிரான்ஸ் பெல்ஜியத்திற்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரெய்னிற்கு எதிராக போரிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என குடும்பங்கள் யாழ்.ஊடக அமையத்தில் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். இதனிடையே போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட இளைஞர்கள் இராணுவ உடையணிந்து பேசுகையில் இரசிய இராணுத்தில் இணைக்கப்பட்டு, உக்ரெய்னுக்கு எதிராக போரிடுவதாக கூறியிருந்தனர். எனினும், இதனை முற்றிலும் மறுத்துள்ள ரசிய தூதுரகம், அவ்வாறான தகவல்கள் […]