இத்தாலியில் வசிக்கும் தம்பதி பெயரில் யாழில் விவாகரத்து!

வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியினரின் பெயரில் யாழ்ப்பாணத்தில் விவாகரத்து பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சட்டத்தரணியின் அலுவலகத்தில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் திருமணமாகி இத்தாலியில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இடையில், சில வருடங்களுக்கு முன்னர் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு இருவரும் இத்தாலியில் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் கணவன், சாவகச்சேரியில் வசிக்கும் தனது சகோதரியிடம், தமக்கு யாழ்ப்பா ணத்தில் திருமணம் நடைபெற்றமையால் யாழ்ப்பாணத்தில் விவாகரத்திற்கு விண்ணப்பித்து […]