இறால் வளர்ப்பாளர்களுக்கு கடன் சலுகை திட்டம்

இறால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் வனமி இறால் வளர்ப்பாளர்களை ஊக்குவிப்பதற்கு கடன் சலுகை திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வனமி இறால் வளர்ப்பாளர்களை ஊக்குவிப்பதற்கு தேவையான மூலதனங்களை வழங்குவதற்காக அரச வங்கிகள் மூலம் சலுகை ரீதியான கடன் முறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இது தொடர்பாக 01.11.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 02. இறால் பண்ணை வளர்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கிலான […]