சமையல் எரிவாயு விலைகளை மீள அதிகரிக்குமாறு கோரிக்கை
சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் கோரியுள்ளது. தாம் விலையை அதிகரிக்கவுள்ளதாக அந்நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்தளவு தொகையினால் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பது குறித்து எந்தத் தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது, அத்தியாவசிய பொருட்களுக்கான பட்டியலிலிருந்து சமையல் எரிவாயு நீக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்நிறுவனத்துக்கு எரிவாயு விலையை அதிகரிக்கக்கூடிய இயலுமை காணப்படுகிறது. இதற்கு முன்னதாக 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலையை லாஃப்ஸ் நிறுவனம் 984 ரூபாவினால் […]