இலங்கைக்கான நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

கசகஸ்தானின் அல்மாட்டியிலிருந்து இலங்கைக்கான நேரடி விமான சேவை முன்னெடுக்கப்படுகிறது. இதற்காக ஏயார் அஸ்டானா விமான சேவையின் ஏ321எல்.ஆர் ரக நெடுந்தூர விமானங்கள், சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வாராந்தம் இரண்டு நாட்களே இந்தச் சேவை இடம்பெறும். அதற்கமைய, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்தச் சேவை இடம்பெறவுள்ளதோடு காலை 5.30 அளவில் அங்குப் பயணத்தை ஆரம்பிக்கும் விமானம் முற்பகல் 11.30 அளவில் இலங்கையை வந்தடையும். பின்னர் 12.30 அளவில் மீளப் பயணத்தை ஆரம்பித்துக் குறித்த விமானம் இரவு 7.40 அளவில் அல்மாட்டி […]