நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறைக்கு தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தற்போதைய சூழ்நிலையில் பெற்றுக்கொள்ள மாட்டோம் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
எமது செய்திச் சேவையுடன் இடம்பெற்ற விசேட நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வீடுகளில் 15 ஆயிரத்திற்கும் குறைவான டொலர் இருக்குமாக இருந்தால், அவற்றை வங்கிகளில் வைப்புச் செய்ய முடியும்.
இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் மாத்திரம், ரூபாவாக மாற்றும்போது டொலர் ஒன்றுக்கு, 10 ரூபா வீதம் மேலதிக பெறுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com