2018ஆம் ஆண்டின் பின்னர் சில மரக்கறிகளுக்கான விலைகள் தற்போது கணிசமாக உயர்வடைந்துள்ளதென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

வருடாந்தம் மே மற்றும் ஜுன் மாதங்களில் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதுடன், ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் விலைகள் வீழ்ச்சியடையும் என அந்த நிறுவகத்தின் உணவுக் கட்டமைப்பு மற்றும் விற்பனை ஆய்வுப் பிரிவின் பிரதானி நாலக்க விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

எனினும், மே மற்றும் ஜுன் மாதங்களில் நிலவும் விலையே, ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உள்ளது.

நிலவும் மழையுடனான வானிலை, பயிரிடப்படும் நிலத்தின் அளவு குறைவடைந்தமை மற்றும் பூச்சிக் கொல்லிகளுக்கான தட்டுப்பாடு என்பன விலை அதிகரிப்புக்கு காரணமாகும்.

இந்த விலை அதிகரிப்பானது எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதி வரையில் தொடரும் என அவர் குறிப்பிட்டார்.

சந்தையில், ஒரு கிலோகிராம் போஞ்சி, தக்காளி கறிமிளகாய் என்பனவற்றின் விலைகள் 400 முதல் 500 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

🛒 தாரணி சூப்பர்மார்கெட்
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com