இந்திய நிதியமைச்சரை சந்தித்தார் பசில் ராஜபக்ஷ

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புதுடில்லி சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்களை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்தியா தமது பொருளாதார திட்டங்களின் ஊடாக இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவிற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ இதன்போது நன்றி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார்.

நிதி அமைச்சராக பதவியேற்றதன் பின்னர், அவர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

முதலீடு மற்றும் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா பரிமாற்றங்கள் மூலம் இந்தியாவிடமிருந்து முக்கியமான பொருளாதார உதவிகளை அவர் பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக கொழும்பின் அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com