இரசாயன உர இறக்குமதியைத் தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை, இரத்துச் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கையொப்பமிட்டுள்ளார்.

இதற்கமைய, இன்று(01) முதல் குறித்த தடை நீக்கப்படுவதாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தமயந்தி எஸ். கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேநேரம், க்ளைபோசெட் உள்ளிட்ட மேலும் சில களைநாசினிகளை இறக்குமதி செய்வதானது, குறித்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், குறித்த வர்த்தமானி அறிவித்தல், அச்சுக்காக இதுவரையில் தமக்கு கிடைக்கப்பெறவில்லையென அரச அச்சகமா அதிபர் கங்காணி லியனகே தெரிவித்துள்ளார்.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com