இலங்கையில் தற்போது கடும் நிதி நெருக்கடி – மோடியை சந்திக்கும் பசில்

நரேந்திர மோடியை சந்திக்கும் பசில்!

புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அத்துடன், சிரேஷ்ட அமைச்சர்களையும், பசில் ராஜபக்ஷ சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்குள் இந்தச் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று(30) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார்.

நிதி அமைச்சராக பதவியேற்றதன் பின்னர், அவர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

முதலீடு மற்றும் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா பரிமாற்றங்கள்மூலம் இந்தியாவிடமிருந்து முக்கியமான பொருளாதார உதவிகளை பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக கொழும்பின் அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடியை சந்திக்கும் இலங்கை மந்திரி பசில் ராஜபக்சே maalaimalar.com

இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே இருக்கிறார். அவரது சகோதரர் பசில் ராஜபக்சே நிதி மந்திரியாக உள்ளார்

இலங்கையில் தற்போது கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவிடம் 500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை கடனாக கேட்டுள்ளது.

இந்த நிலையில் பசில் ராஜபக்சே முதல் முறையாக நேற்று டெல்லி வந்தார். கொரோனாவால் இலங்கையில் கடும் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் இந்தியா வந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பசில் ராஜபக்சே பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அப்போது அவர் இலங்கைக்கு பொருளாதார உதவியை வழங்குமாறு கேட்டுக்கொள்வார் என்று கொழும்பில் இருந்து அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலமும், சுற்றுலா பரிமாற்றங்களை மேம்படுத்துவதன் மூலமும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கலாம் என்று இலங்கை கருதுகிறது.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com