உரிய யுக்திகளை கையாள்வதன் மூலம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் 8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தைக்கப்பட்ட ஆடைகளை ஏற்றுமதி செய்ய முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டின் கீழ் இடம் பெற்ற மாநாட்டில் இந்த கருத்து வெளியிடப்பட்டது.
‘மீள பொருளாதாரத்தை கட்டியெழுப்பல்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியாளர்கள் உட்பட பொருளாதார மேம்பாட்டில் நேரடியாக சம்பந்தப்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது தவிர, கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ள பொருளாதாரத்தை சீர் செய்வது குறித்து பல பொருளாதார நிபுணர்கள் கருத்தினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com