அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் உயர்ந்துள்ளதாகவும், அவை விலை கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 60 மருந்துகளின் 131 வகைகளின் விலைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கான ஆகக்கூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
எனவே, அதிக விலையில் பின்வரும் மருந்துகளை விற்பனை செய்பவர்கள் தொடர்பான தகவல்களை complaints@nmra.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, மருத்துகளின் விலைகள் 100%, 200 % இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும், டொலரின் பெறுமதிக்கமைய, ஆகஸ்ட் மாதம் மருந்துகளின் விலைகளை 9 சதவீத்தில் மாத்திரம் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் முறையான விற்பனை விலையை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக, மருந்துகளின் விலைப்பட்டியலை, மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ளது.
🛒 தாரணி சூப்பர்மார்கெட்
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com