2022 ஆம் ஆண்டில் அரச சேவைக்கு புதிய ஊழியர்களை இணைப்பதில்லை – பசில் அதிரடி

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் அரச சேவைகளுக்கு புதிதாக ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் வாகன இறக்குமதிகள் இடம்பெற மாட்டாதெனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அடுத்த ஆண்டின் இறுதி வரை அரச துறைக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் மேலும், பால்மா இறக்குமதிக்காக நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விவசாயத்துறை அமைச்சில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இரசாயன உரம் மற்றும் இரசாயன கிருமிநாசினி இறக்குமதிக்காக தனியார் தரப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிலைபேறான விவசாயம் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது.நிலைப்பேறான விவசாய கொள்கையை செயற்படுத்துவதற்காக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தின் ஊடாக நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.தற்போது வெளிநாட்டு கையிருப்பு பிரதான பிரச்சினையாகவுள்ளது.

அரசாங்கத்திடமிருந்த கையிருப்பு அத்தியாவசிய உணவு பொருட்கள்,மருந்து,எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கும்,அரச முறை கடன்களை மீள செலுத்துவதற்கும் செலவழிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தேசிய பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் பால்மா மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கிராமிய அபிவிருத்தி;க்காக வரவு –செலவு திட்டத்தி;ன் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தேசிய உற்பத்திகளை மேம்படுத்த நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தான் கிராமிய அபிவிருத்திக்காக வரவு-செலவு திட்டத்தி;ன் ஊடாக நிதி ஒதுக்கினார்.

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு 03மில்லியனும்,பிரதேச சபை தொகுதிக்கு 04 மில்லியனும்,பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 100மில்லியனும், கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

விவசாயத்துறை அமைச்சின் ஊடாக 365 உற்பத்தி மற்றும் விதை உற்பத்தி கிராமங்களையும், 365 உர உற்பத்தி கிராமங்களையும் உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உர இறக்குமதியை முழுமையாக தடை செய்து தேசிய மட்டத்தில் விதைகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்கு,வெங்காயம்,மிளகாய் ஆகிய உணவு பொருட்கள் இறக்குமதியை முழுமையாக தடை செய்து அவை தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நாட்டு மக்களின் திரவ பால் பயன்பாட்டில் 40 சதவீதம் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படுவதுடன்,60 சதவீதம் இறக்குமதிசெய்யப்படுகிறது.

இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும்.எதிர்வரும் காலங்களில் 80 சதவீத திரவபாலினை தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com