ர்வதேச சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், ‘உலக பயணிகள் சந்தை’ என்ற அமைப்பு லண்டனில் அங்குரார்பனம் செய்துள்ளது.

லண்டனில் உள்ள எக்ஸ்சல் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வு இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆரம்ப நிகழ்வில் 20 சர்வதேச பயணிகள் முகவர் அமைப்புக்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் நடவடிக்கைகளுக்கு இலங்கை உயர்ஸ்தானிகராலயம் பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த செயல் திட்டத்திற்கு அமைய எதிர்காலத்தில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை பிரித்தானியாவில் இருந்து எதிர்பார்க்க முடியும் என நம்பப்படுகின்றது.

அதேவேளை, அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை கொண்டு வரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக கொழும்பு – மெல்பேர்னுடனான நேரடி வாநூர்தி சேவைகள் வாரத்திற்கு மூன்று முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை குறிப்பிடத்தக்கது.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com