டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒத்துழைப்பைப் பெறுவதா? இல்லையா? என்பது தொடர்பில், நாளைய தினம் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

நவம்பர் 30 ஆம் திகதியன்று, இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கம், 1009.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

இவ்வாறான பின்னணியில், இறக்குமதி செலவை ஈடுசெய்தல் மற்றும் கடன் செலுத்தல் என்பன நெருக்கடி நிலையில் உள்ளன.

இந்நிலையில், வெளிநாட்டு நாணய கையிருப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெறுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துகிறது.

இது தொடர்பில் நாளைய தினம் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com