வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரக பிரதிநிதிகள் 4 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

காலாவதியான தொழில் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி ஆட்களை வெளிநாட்டிற்கு அனுப்பிய குருணாகல் பகுதியைச் சேர்ந்த வேலைவாய்ப்பு முகவரக பிரதிநிதிகள் நான்கு பேருக்கு வெளிநாடு செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி குறித்த நிறுவனத்தின் செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்த நிலையில், சந்தேகநபர்கள் அதனை புதுப்பிக்காது பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனையில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள், நாட்டின் பல பகுதிகளில் உள்ள 40க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளிடம் 54 இலட்சம் ரூபா பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கு முற்பட்டபோதிலும் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் வெளிநாடு செல்வதற்கு குருணாகல் நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்