வெளிநாட்டு உதவியை நாடும் தேசிய ஏற்றுமதி வர்த்தக சம்மேளனம்

இலங்கையில் உள்ள வெளிநாட்டு உயர்ஸ்தானிகராலயங்கள் வர்த்தக பிரிவுகளை ஸ்தாபித்து ஏற்றுமதி நடவடிக்கைகளுக்குத் தம்மாலான உந்துசக்தியினை வழங்க வேண்டும் எனத் தேசிய ஏற்றுமதி வர்த்தக சம்மேளனம் கோரியுள்ளது.

அவர்கள் பணியாற்றும் நாடுகளுக்குத் தேவையான பொருட்களின் விபரங்களை உடனுக்குடன் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் இணைய தளத்திற்கு அனுப்ப வேண்டும்.

இதன் மூலம் சர்வதேச இறக்குமதியாளர்களின் உறுதியான எதிர்பார்ப்புகுறித்து, இலங்கை ஏற்றுமதியாளர்கள் தகவல்களைத் துரிதகதியில் பெற முடியும்.

இதற்கமைய ஏற்றுமதியாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஏற்றுமதியினை அதிகரிக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் பாதீட்டில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படுவதன் அவசியம் குறித்தும் தேசிய ஏற்றுமதி வர்த்தக சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

சிறப்புச் செய்திகள்