வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்ப நடவடிக்கை

இந்தியா, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை சுற்றுலாத்துறை தொடர்பான விளம்பரப்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் நவம்பர் மாதம் முதல், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக 273 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

கொவிட்-19 காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையினை மீள கட்டியெழுப்பும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுற்றுலா அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்