கடந்த 10 முதல் 15 வரையான வருட காலப்பகுதியில் விவசாய போகத்தின் ஊடாக ஈட்டப்பட்ட அதிக ஏற்றுமதி வருமானம் இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆண்டின் முதல் 10 மாதங்களில் கடந்த ஆண்டை விடவும் 22 பில்லியன் ரூபாவுக்கும் அதிக ஏற்றுமதி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இதேவேளை விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் இல்லை என தெரிவித்து இன்றும் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
உரத்தட்டுப்பாடு காரணமாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
உரத்தட்டுப்பாட்டுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com