விவசாய உற்பத்தி பொருட்களுக்கு மீண்டும் அனுமதி

இலங்கையில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த விவசாய உற்பத்தி பொருட்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று (24/11) முதல் அமுலுக்கு வரும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதேவேளை இரசாயன உரம், களைநாசினி மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் இரசாயன உரம், களைநாசனி மற்றும் திரவ உரம் என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்