மலையகத்தில் பயிரிடப்படும் மரக்கறிகள் நேற்றிரவு சில பொருளாதார மத்திய நிலையங்களுக்குக் கிடைக்கப்பெற்றதை அடுத்து, மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு ஓரளவுக்குக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றன.

விவசாயிகளினால் மரக்கறிகள் வழங்கப்படாமை காரணமாகக் கடந்த சில தினங்களாகப் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் உயர்வடைந்துள்ளன.

கறிமிளகாய் ஒரு கிலோ 400 முதல் 600 ரூபாவாக மொத்த விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், தக்காளி மற்றும் பீட்ரூட் ஆகியன 280 முதல் 320 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.

அத்துடன், போஞ்சி கிலோவொன்று 300 முதல் 440 ரூபா என்ற மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன், சில பிரதேசங்களில் மரக்கறிகளின் விலை மேலும் உயர்வடைந்துள்ளது.

இதேதேளை, தங்களுக்குத் தொடர்ந்தும் உரிய அளவில் மரக்கறிகள் கிடைக்கவில்லையென புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மரக்கறி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, மரக்கறிகளின் விலைகள் உயர்ந்த அளவிலேயே உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com