விமானங்களுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு டொலரை வழங்குமாறு கோரிக்கை

விமானங்களுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான டொலரை வழங்குமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது.

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மேலும் 330 மில்லியன் டொலரை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து உத்தியோகபூர்வமாக விமான சேவை நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எரிபொருளுக்கான டொலரை வழங்குவதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கூறியது.

இதேவேளை, மின்சார சபையின் எரிபொருள் தேவைக்கு டொலர் தேவைப்படுவதால் அதற்கு பொருத்தமான வழிமுறையை முன்னெடுக்குமாறு எரிசக்தி அமைச்சு, இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளது.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்