ஏழு வகை விதைகளின் இறக்குமதியை அடுத்த வருடம் முதல் வரையறுக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய், சின்னவெங்காயம், உழுந்து, சோளம் மற்றும் நிலக்கடலை ஆகிய விதைகளை இறக்குமதி செய்வதை வரையறுப்பது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி , அளுத்கம மிளகாய் விதை உற்பத்தி கிராமத்தில் 1500 கிலோகிராம் கலப்பு விதைகள் தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
தம்புளை – திகம்பதன விவசாய பண்ணையில் பெரிய வெங்காய விதை உற்பத்தி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா அரச விவசாய பண்ணையில் உருளைக்கிழங்கிற்கான விதை உற்பத்தி முன்னெடுக்கப்படுவதுடன், சின்ன வெங்காயம், உழுந்து, நிலக்கடலை மற்றும் சோள விதைகளுக்கான உற்பத்தியும் வெற்றிகரமாக இடம்பெறுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com