இறக்குமதி செய்யப்படும் விதைகளுக்கான நிலையான விலையை நிர்ணயிக்க வேண்டும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விதை சபை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் விதைகளுக்காக சில வர்த்தகர்கள் அதிகளவிலான நிதியை அறவிடுவதாக முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளது.
இதன்படி, சில வர்த்தகர்கள் 50 கிராம் விதையை 6,000 ரூபாவிற்கு விற்பனை செய்வதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நிலையான விலையை நிர்ணயிக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com
Post Views: 39