வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை

ஐக்கிய அரபு நாடுகள் கூட்டமைப்பினால் 2022 ஜனவரி 1 ஆம் திகதி முதல் வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகளான ரஸ் அல் கைமா , அபுதாபி, சார்ஜா, துபாய், அஜ்மன், உம்-அல்-குவைன் மற்றும் புஜைராவில் ஜனவரி 1 ஆம் திகதி முதல் புதிய பணி நேரம் அறிமுகமாகவுள்ளது.

அதன்படி , திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 முதல் மாலை 3.30 வரை 8 மணி நேர பணியும் வெள்ளிக்கிழமை காலை 7.30 முதல் மதியம் 12 வரை 4.30 மணி நேர பணியும் நடைமுறைக்கு வருகிறது.

வெள்ளி மதியம் 1.15 மணிக்கு தொழுகை முடிந்ததிலிருந்து சனி , ஞாயிறு உட்பட 2.5 நாட்கள் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியை அதிகரித்தல், குடும்பத்தை கவனித்தல் ஆகிய காரணங்களுக்காக இந்த புதிய பணித்திட்டம் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். தற்போது, அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை மட்டுமே விடுமுறை நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

24 மணிசேவையை வழங்கி வருகிறது யாழில் தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்