வாகன உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நிவாரணம்!

பிராந்திய மற்றும் மாவட்ட மட்டங்களில் கைத்தொழில் வலயங்களை நிர்மாணிப்பதற்காக ரூபா 5,000 மில்லியனையும், தடையற்ற குடிநீர் விநியோகத்தை வழங்குவதற்காக ரூபா 15,000 மில்லியனையும் ஒதுக்குவதற்கும் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய அவர் வீதி அபிவிருத்திக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக மேலும் 20,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தி முதலீடுகளை ஊக்குவிக்க ரூ.5,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

நகர்ப்புற வீடமைப்பு அபிவிருத்திக்காக 2000 மில்லியன் ரூபாவும், கிராமப்புற வீடமைப்பு அபிவிருத்திக்காக 5,000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும் எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அவரவர் பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி மேலும் 5 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்படும்.

இதேவேளை, பாடசாலை வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 400 மில்லியன் ரூபாவை ஒதுக்க நிதி அமைச்சர் முன்மொழிந்தார்.

மேலும், வருமானத்தை இழந்த முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 700 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! ( tharanysupermarket.com )

சிறப்புச் செய்திகள்