லிட்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான 4,000 மெட்ரிக் டன் பெற்றோலிய திரவ எரிவாயு அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இதனால் நாட்டில் தடையின்றி எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாக பல இடங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்காலிகமாக ஏற்பட்டிருந்த இந்தத் தட்டுப்பாடு, தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சந்தையில் சமையல் எரிவாயு, சீமெந்து தட்டுப்பாடு வலுவடைந்தது
Post Views: 36