உலகளாவிய நிலைமையால் தனியார் நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்படும் யூரியா உரப் பொதி ஒன்றின் விலை 10,000 ரூபாவை நெருங்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட இரசாயன உரத்தை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தலை மாற்றியமைக்க தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

600,000 ஹெக்டேர் நிலத்தில் நெற் செய்கைக்காக பயிரிடப்பட்டுள்ளதாகவும், எனினும் முழு பிரதேசத்திலும் களைக்கொல்லிகள் இல்லை.

600,000 ஹெக்டேர் நிலத்தில் களைகளை அகற்ற விவசாயிகளுக்கு 31 மில்லியன் வேலை நாட்கள் தேவைப்படும் என்றும் விவசாயிகளால் கைகளால் களைகளை அகற்ற முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com