யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு அருகே சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், இவ்வாறு சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வந்ததன் பின்னர் காங்கேசன்துறை இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com