யாழ்ப்பாணத்திற்கும் – காரைக்காலுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை

யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாடு காரைக்காலுக்கும் இடையே பயணிகள் கப்பல் சேவை ஒன்றினை ஆரம்பிப்பது குறித்து ஆராயப்படுவதாக இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பன்முக மாதிரி போக்குவரத்து உச்சி மாநாடு 2021’ இல் ஆரம்ப உரையினை ஆற்றும்போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுதவிர, திருகோணமலை துறைமுகத்தை தொழில்துறை துறைமுகமாக அபிவிருத்தி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த பல பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, துறைமுகங்கள் அதிகார சபையின் நடவடிக்கைகளை டிஜிட்டல் முறைமைக்கு கொண்டு வருவதுடன் பல நவீன செயல்பாடுகளும் அறிமுகப்படுத்தப்படும் என துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவர் கப்டன் நிஹால் கெப்பற்றிபொல தெரிவித்துள்ளார்.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்