யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று (9) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது.

இதன்காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண ஆளுநருடன் ஆலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கும் பொறுப்பு, அம்மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! ( tharanysupermarket.com )