மேல் மாகாணத்தில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் யாசகத்தில் ஈடுபடுபவர்களைப் பரிசோதித்து அவர்களுக்குக் கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு வழிகாட்டும் விசேட வேலைத்திட்டமொன்று நேற்று (30) ஆரம்பிக்கப்பட்டது.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நேற்று (30) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, 541 யாசகர்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், அதில் ஒரு தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாத 77 யாசகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, அவர்களில் 22 பேருக்கு நேற்று (30) கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதுடன், ஏனைய 55 பேருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும் என மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.
Post Views: 55