மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 38 சதவீத பங்கை மேல்மாகாணம் தனதாக்கியுள்ளது

கொவிட் பரவலுக்கு மத்தியில், மேல் மாகாணம் பொருளாதாரத்தின் உயிரோட்டத்தின் மையமாக தொடர்ந்தும் விளங்கிய அதேவேளை, அதன் பங்கு வீழ்ச்சியடைந்து ஒட்டுமொத்த சுருக்கமடைதலுக்கும் பங்களிப்பு செய்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 38 சதவீதம் என்ற பாரிய பங்கினை மேல் மாகாணம் தனதாக்கிக் கொண்டது.

எனினும், நோய்த்தொற்று நிலைமையின் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் மெதுவடைந்ததன் விளைவாக அதன் பங்கு 2019 இலிருந்து 1 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது.

மத்திய மாகாணம் 11.3 சதவீதமாகவும், வடமேல் மாகாணம் 11 சதவீதமாகவும் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளில் காணப்பட்டன.

வடமேல், தென், சப்பிரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களின் மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்திப் பங்குகள் அதிகரித்த அதேவேளை, மேல் மற்றும் வட மாகாணங்களில் ஆண்டிற்கு ஆண்டுப் பங்கு வீழ்ச்சிகள் அவதானிக்கப்படக்கூடியதாக இருந்ததென மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்