நாளை (13) முதல் மேலும் 58,000 லீட்டர் நனோ நைதரசன் திரவ உரத்தை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளதாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை, குருணாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்காக திரவ உரம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக விவசாய சேவைகள் பணிப்பாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன தெரிவித்துள்ளார்.
ஹெக்டேயருக்கு 1.5 லீட்டர் திரவ உரம் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விவசாயி ஒருவருக்கு 02 ஹெக்டேயருக்கான திரவ உரத்தை இலவசமாக விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த 03 மாவட்டங்களுக்கான நனோ திரவ உர விநியோக நடவடிக்கைகள், இன்று (12) முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com