மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கைக்கு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாம் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.

விமானமொன்றின் மூலம் 44,730 கிலோகிராம் நனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

அதேநேரம் கடந்த 20 ஆம் திகதி நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் முதல் தொகுதி இறக்குமதி செய்யப்பட்டது.

யாழில் உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் ( tharanysupermarket.com ) 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!!

அது விவசாயிகளின் பெரும்போக செய்கைக்காகப் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய, குறித்த உரத்தைப் பகிர்ந்தளிக்கும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, அம்பாறை, அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்குக் கமநல சேவை மத்திய நிலையங்களினூடாகக் குறித்த உரம் விநியோகிக்கப்படுவதாக விவசாயத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்