JAT Property குரூப் பிரைவட் லிமிடெட், தனது நான்காவது வதிவிட நிர்மாணத் திட்டமான – 146 Residencies ஐ நிர்மாணிக்கும் பணிகளை தலவத்துகொடயில் ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. 2024 மார்ச் மாதமளவில் இந்த நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நிர்மாணப் பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சுமார் 30%ஆன குடியிருப்புகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனூடாக இந்த நிர்மாணத் திட்டம் முதலீட்டுக்கு அதிகளவு கவர்ச்சிகரமானதாக அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
92 பேர்ச் காணிப்பகுதியில் நிர்மாணிக்கப்படும் இந்தத் தொகுதியிலுள்ள குடிமனை ஒன்றின் ஆரம்ப விலை 22 மில்லியன் ரூபாயாக அமைந்துள்ளது. அடுத்த 2 முதல் 3 வருட காலப்பகுதியில் 146 Residencies ஊடாக 25-35% மூலதன வருமதியை ஈட்டக்கூடியதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், வருடாந்தம் வாடகை வருமதிகள் 7% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
JAT Property குரூப் பிரைவட் லிமிடெட் பணிப்பாளர் ரிச்சர்ட் குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை சந்தையில் எமது நான்காவது ரியல் எஸ்டேட் அபிவிருத்தித் திட்டமான 146 Residencies ஐ அறிமுகம் செய்வதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நிர்மாணத்திட்டத்தில் அடங்கியுள்ள 112 அலகுகளும் கவனமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அதிகளவு வினைத்திறன், அழகியல் அம்சங்கள் மற்றும் அலங்காரம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலுள்ளது. சந்தையில் நாம் கொண்டுள்ள அனுபவம் மற்றும் பெற்றுக் கொண்ட நிபுணத்துவத்தினூடாக, பொது வசதிகளில் சிறந்த அம்சங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாம் அதிகளவு கவனம் செலுத்தியுள்ளோம். ஓய்வு நேரத்தையும், செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்காகக்கூட உள்ளம்சங்களை உள்வாங்கியுள்ளோம். அதனூடாக எமது சகல உள்ளம்சங்களும் வசதிகளும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதாக அமைந்திருப்பதை உறுதி செய்கின்றோம். பிரத்தியேகமான வடிவமைப்பு மற்றும் வசிப்பிட பகுதிகள் போன்றவற்றின் காரணமாக, 146 Residencies என்பது அதிகளவு நாடப்படும் செயற்திட்டங்களில் ஒன்றாக அமைந்திருக்கும் என்பதுடன், வேகமாக வளர்ந்து வரும் நகரப் பகுதியில் முதலீட்டுக்கு உயர் வருமதிகளைப் பெற்றுக் கொடுப்பதாகவும் இருக்கும்.” என்றார்.
12 மாடிகளில் நிர்மாணிக்கப்படும் 112 தொடர்மனை அலகுகள், 2, 3 மற்றும் 4 படுக்கையறை வசதிகளை கொண்டிருக்கும் என்பதுடன், 688.6 சதுர அடி முதல் 2367.2 சதுர அடி வரை இடவசதிகளைக் கொண்டிருக்கும். முதலீட்டாளர்களும் வசிப்போரும் மட்டுப்படுத்தப்பட்டளவு தோட்டத்துடனான – டெரஸ் பகுதியைக் கொண்ட குடிமனைகளை பெற்றுக் கொள்ள முடிவது இந்தத் திட்டத்தின் பிரத்தியேகமான அம்சமாக அமைந்துள்ளது. இந்த தொடர்மனையின் 8,800 சதுர அடியிலமைந்த மொட்டை மாடி பகுதியில் நவீன நகரமயமாக்கல் வாழ்க்கை முறைக்கு உகந்த பொதுவான வசதிகளை கொண்டிருக்கும். 360 பாகை நகர மற்றும் சூழவுள்ள பசுமையான பகுதிகளின் காட்சியமைப்பு, விசேட வடிவமைப்பைக் கொண்ட நீச்சல் தடாகம் மற்றும் bbq பகுதி ஆகியவற்றுடன் சிறுவர்களுக்கான விளையாட்டு பகுதி போன்றன அடங்கியிருக்கும். மேலும், விருந்தினர்களுக்காக பிரத்தியேகமான பொழுதுபோக்கு பகுதியும் அடங்கியிருக்கும். இதில் பார், பூல் மேசை மற்றும் களிப்பூட்டும் பகுதிகள் போன்றன காணப்படும். அத்துடன், வதிவோருக்கு உடற்பயிற்சிகளில் ஈடுபடக்கூடிய நவீன வசதிகள் படைத்த உடற்பயிற்சி நிலையம் அமைந்திருக்கும்.
JAT Property குரூப் பிரைவட் லிமிடெட் விற்பனை பிரிவின் தலைமை அதிகாரி ஆதீக் ஜாபிர் கருத்துத் தெரிவிக்கையில், “146 Residencies குறித்த அறிவிப்பு வெளியாகி ஆறு (6) வார காலப்பகுதியினுள் 30% ஆன முன்கூட்டிய விற்பனைகள் பதிவாகியுள்ளன என்பதை அறிவிப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். தொற்றுப் பரவல் காரணமாக, முழு தொழிற்துறையும் நெருக்கடியான கால கட்டத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்காக நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.
வாடிக்கையாளர் செலுத்தும் பணத்துக்கு இந்த தொடர்மனைத் தொகுதியின் அமைவிடம், கண்கவர் காட்சியமைப்புகள், வசதிகள் மற்றும் உள்ளம்சங்கள், அலகுகளின் வடிவமைப்புகள் மற்றும் அளவுகள் போன்றன பெறுமதி வாய்ந்ததாக அமைந்திருக்கும் என்பதில் நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். முதலீட்டு நோக்கிலும் வதிவிட நோக்கிலும் 146 Residencies இல் குடியிருப்பை கொள்வனவு செய்ய முடியும். எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால, அர்த்தமுள்ள முதலீடுகளை மேற்கொள்வதற்கு உதவிகளை வழங்கி அவர்களின் எதிர்கால இல்லங்களை தெரிவு செய்து கொள்வதற்கு வழிகாட்டல்களை வழங்குவது JAT Property ஐச் சேர்ந்த எமது இலக்காக அமைந்துள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சேவையாற்றக் கிடைத்துள்ளதையிட்டு நாம் மிகவும் திருப்தியடைகின்றோம்.” என்றார்.
JAT Property குரூப் பிரைவட் லிமிடெட் 146 Residencies இன் நிர்மாணிப்பாளராக அமைந்திருப்பதுடன், இதன் அலங்கார வடிவமைப்பை புகழ்பெற்ற கட்டடக் கலை நிறுவனமான Design Consortium Limited (DCL)மேற்கொள்கின்றது. JAT Property இன் நான்காவது நிர்மாணத் திட்டமாக 146 Residencies அமைந்திருப்பதுடன், இதற்கு முன்னதாக கண்டியில் ‘Forest Hill’, நாவலயில் ‘77 on Fourth Residencies’ மற்றும் கோட்டே பகுதியில் ‘96 Residencies’ ஆகியவற்றை முன்னெடுத்துள்ளது.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com