சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் பாரியளவு தாமதமடைந்துள்ளதாக நுகர்வோர் குறிப்பிடுகின்றனர்.
சில இடங்களில் லிட்ரோ எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
இந்தவிடயம் குறித்து எமது செய்தி சேவை லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யு.கே.எச்.வேகப்பிட்டியவிடம் வினவியது.
இதற்கு பதிலளித்த அவர் டொலர் தட்டுப்பாடு காரணமாக உற்பத்திகளை சந்தைக்கு விநியோகிப்பதில் சிக்கல் நிலவுவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் எரிவாயு விநியோகம் தொடர்பில் எமது செய்தி சேவை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்கவிடம் வினவியது.
இதற்கு பதிலளித்த அவர், லிட்ரோ எரிவாயுவின் நாளாந்த விநியோகம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
லிட்ரோ எரிவாயு பாவனையாளர்களுக்கு நாளாந்தம் 12.5 கிலோகிராம் நிறையுடைய 75,000 கொள்கலன்கள், 5 கிலோ கிராம் நிறையுடைய மற்றும் 2.5 கிலோ கிராம் நிறையுடைய 25,000 கொள்கலன்கள் அவசியமாகின்றது.
இந்தத் தொகை தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் லாஃப்ஸ் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக எரிவாயுவுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.
யாழில் 🛒 தாரணி சூப்பர்மார்கெட் ⏰ 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com