மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பம்

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 1,600 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

அதன் பிரதி பொது முகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு அமைய செகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இன்று (31) முதல் 50 சதவீதமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.

கடந்த காலம் போன்று தனியார் பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்த ஒரு வருட காலம் எடுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறப்புச் செய்திகள்