நாடுமுழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நேற்று (2) காலை முதல் மறு அறிவித்தல்வரை இதனை அமுல்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு தரம் பற்றிய தெளிவான உத்தரவாதம் கிடைக்கும் வரை இந்த முடிவு அமலில் இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

இதேவேளை, இது தொடர்பில் லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.வேகபிட்டியவிடம் நாம் வினவியபோது, ​​தமது நிறுவனத்திற்கு நுகர்வோர் அதிகார சபையோ அல்லது நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சரோ அறிவிக்கவில்லையென தெரிவித்தார்.

எனவே, தமது எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com