சந்தையில் மரக்கறிகளுக்கு தற்போது நிலவும் தட்டுப்பாடு, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை விசேட பொருளாதார மைய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சந்தைக்குக் கிடைக்கப்பெறும் மரக்கறிகளின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளமையால், மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பதாக அந்த ஒன்றியத்தின் முகாமைத்துவ பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய, நுவரெலியா பொருளாதார மையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் அளவு 60 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்புத்தேகம பொருளாதார மையத்திற்கு இன்று 20 சதவீதமான மரக்கறிகளே கிடைத்துள்ளன.
தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் அளவு, 15 வீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், மெனிங் சந்தைக்கு 25 சதவீத மரக்கறிகளே கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் என்பன இல்லாதமை காரணமாக விவசாயிகளின் அறுவடைகள், பொருளாதார மையங்களுக்கு கிடைக்காமையினால், பண்டிகைக் காலத்தில், மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை விசேட பொருளாதார மைய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com