தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பின்புறத்தில் அமைந்துள்ள களஞ்சியசாலையிலிருந்து மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பெருந்தொகையான சீனி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை நகர சபையின் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, குறித்த ஒரு தொகை சீனி விற்பனைக்காக பொதியிடப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 10,000 கிலோகிராம் சீனி கண்டுபிடிக்கப்பட்டதாக தம்புள்ளை நகர சபையின் தலைவர் ஜாலிய ஓபாத தெரிவித்துள்ளார்.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com