மண்ணெண்ணெய் அடுப்பு மற்றும் மின்சார அடுப்பின் விலைகள் சந்தையில் சடுதியாக அதிகரித்துள்ளன.
சமையல் எரிவாயு தொடர்பில் தற்போது, ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக பொதுமக்கள் மாற்று நடவடிக்கையாக சந்தையில் மண்ணெண்ணெய் அடுப்பு மற்றும் மின்சார அடுப்பினை கொள்வனவு செய்தமையினால் இவ்வாறு அவைகளினது விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
2,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்ணெய் அடுப்பு ஒன்றின் விலையானது தற்போது 8,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், புறக்கோட்டை மற்றும் புறநகர்பகுதிகளில் மண்ணெண்ணெய் அடுப்பு இல்லாமையினால் நுகர்வோரும், வர்த்தக நிலைய உரிமையாளர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com