மஞ்சள் தூளின் விலையில் வீழ்ச்சி!

நாட்டில் மஞ்சள் தூளின் விலை 7000 ரூபாவிலிருந்து 4500 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதுவரையில் உள்நாட்டு சந்தையில் அதிகரித்து காணப்பட்ட மஞ்சள் தூளின் விலையானது, உள்ளூர் அறுவடைகள் சந்தைக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து வீழ்ச்சியடைந்துள்ளது.

அவ்வாறே விதை மஞ்சள் கிலோவொன்றின் விலை 1000 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெவ்வேறு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளில் பெரும்பாலானோர் மஞ்சள் செய்கையிலும் ஈடுபட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது

சிறப்புச் செய்திகள்