பொலித்தீன் பைகளின் விலைகளும் அதிகரித்தன!

உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக பொலித்தீன் பைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சந்தையில் தொடர்ந்தும் சீமெந்து மற்றும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கும் நுகர்வோர், அவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் சீனி மற்றும் அரிசியின் விலைகள் கட்டுப்பாடின்றில் உயர்ந்துள்ளதாக நுகர்வோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! ( tharanysupermarket.com )

சிறப்புச் செய்திகள்