நாட்டில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் தற்போது பாரியளவு அதிகரித்து காணப்படுகின்றன.
வரலாற்றில் முதல் தடவையாக இந்த அளவு அதிக விலைக்கு போஞ்சி, தக்காளி, கறிமிளகாய் உள்ளிட்ட மரக்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விலை அதிகரிப்பானது, எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் மூன்றாம் வாரம் வரையில் தொடரும் என ஹெக்டர் கொப்பேகடுவ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் எதிர்வரும் பண்டிகை காலத்தில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கலாமென விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
தற்போது மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாக பேலியகொட மெனிங் சந்தையில் உள்ள வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் நுவரெலியா விவசாயிகள் தங்களது அறுவடை நடவடிக்கைகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com